Octopusin Pethi / அக்டோபஸின் பேத்தி
-
₹280
- SKU: NV0001
- Author: Latha Arunachalam
- Language: Tamil
- Pages: 176
- Availability: In Stock
லதா அருணாச்சலம்
மொழிபெயர்த்திருக்கும் இக்கதைகள் ஆப்பிரிக்க நிலத்தில் நிகழ்பவை. அந்த மக்களின்
மொழியில் எழுதப்பட்டவை. ஊரும் பெயர்களும் உணவும் உடையும் வேறு வேறு. களங்கள் வேறு.
ஆனால், இவை நமக்கு தரும்
உணர்வுகளில் பேதங்கள் எவையுமில்லை. இவற்றில் நாம் காணும் உவகையும் கண்ணீரும்
கருணையும் துயரமும் மொழிகளைக் கடந்தவை. எங்கோ ஒரு கண்டத்தில் ஏதோவொரு நிலையில்
உள்ள ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடிகிறது. அவனுடன் உரையாட முடிகிறது. அவனது
சிரிப்பு நமக்கு மகிழ்ச்சி தருகிறது. துக்கம் மனச்சோர்வை அளிக்கிறது. இடைத்தூரம்,
அடையாளம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் என எதுவுமே அவனை அறியத் தடையாக
இல்லை. பரந்துபட்ட இவ்வுலகு மிகச் சிறிது, கைகளை சற்றே நீட்டி விரித்தால் எங்கிருக்கும் மனிதனையும் நம்மால் தழுவிக்கொள்ள
முடியும் என்ற பலத்த நம்பிக்கையை அளிக்கின்றன இத்தொகுப்பில் உள்ள கதைகள்.










